என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மத்திய அரசு ஊழியர்
நீங்கள் தேடியது "மத்திய அரசு ஊழியர்"
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. #UnionCabinet #DearnessAllowance
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால், அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயருகிறது.
கடந்த ஜனவரி 1 முதல், முன்தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகிறது.
அகவிலைப்படி உயர்வு காரணமாக, நாடு முழுவதும் உள்ள சுமார் 48 லட்சத்து 41 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 62 லட்சத்து 3 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார்.
7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகள் அடிப்படையில் வகுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அரியலூர் அருகே வேத மந்திரங்களின்றி திருக்குறள் வாசித்து மத்திய அரசு ஊழியரின் திருமணம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழுரை சேர்ந்தவர் சக்திவேல். மத்திய அரசு ஊழியரான இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சத்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தமிழ்மொழி மேல் உள்ள பற்றுதல் காரணமாக தனது திருமணத்தை திருக்குறள்படி நடத்த சக்திவேல் முடிவு செய்தார். அது பற்றி மணமகள் வீட்டில் தெரிவித்த போது, முதலில் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் சக்திவேல் தனது நிலையில் உறுதியாக இருந்ததால், அவரது விருப்பத்திற்கு அனைவரும் சம்மதித்தனர். இதையடுத்து தா.பழுரில் உள்ள திருமண மண்டபத்தில் வேத மந்திரங்களின்றி சக்திவேல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது திருவள்ளுவர் உருவச்சிலை வைத்து, புலவர் மோகன் திருக்குறள் வாசித்து அதன் பொருள் கூறினார்.
அதனைத்தொடர்ந்து மணமக்கள் உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து மணமகன் சக்திவேல், மணமகள் சத்யாவுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். தொடர்ந்து மணமக்கள் அரசு மற்றும் வேப்ப மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற, உறவினர்கள் ஆசீர்வாதம் செய்தனர். இந்த திருக்குறள் திருமணத்தை உறவினர்கள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்தனர். திருமணத்தையொட்டி மண்டபம் முழுக்க இல்வாழ்க்கை, வாழ்க்கை துணை நலம்,மக்கட்பேறு, அன்புடமை ஆகிய 4 அதிகாரங்களில் உள்ள திருக்குறள் வரிகள் ஆங்காங்கே எழுதப்பட்டிருந்தன.
திருக்குறள் திருமணம் செய்த சக்திவேலின் தந்தை நீலகண்டன் டீக்கடை வைத்துள்ளார். இவர் தனது பேச்சின் போது அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவார். இதனால் சக்திவேலுக்கு சிறுவயது முதலே திருக்குறள் மீதும், தமிழ்மொழி மீதும் தீராத பற்று ஏற்பட்டுள்ளது. அதன் விளைவால் திருக்குறள்படி தனது திருமணத்தை நடத்தியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கக்கோரி மதுரையில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை:
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக டாக்டர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் பாலாஜி நாதன், தாமோதரன், பேராசிரியர்கள் பிரிவு தலைவர் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் சங்க பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உயர்த்திடு உயர்த்திடு அலவென்ஸ் பணத்தை உயர்த்திடு, வேண்டும் வேண்டும் சம்பளம் வேண்டும், வேலைக்கேற்ற ஊதியம் மருத்துவர்களுக்கு கவுரவம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து டாக்டர் செந்தில் நிருபர்களிடம் கூறுகையில், மற்ற துறைகளை விட டாக்டர்களுக்கு அதிக பணிசுமை ஏற்படுகிறது. மதுரையை பொறுத்தமட்டில் டாக்டர்களின் பணி முக முக்கியமாதாக இருக்கிறது. எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்க வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுள்ளது.
போராட்டத்தின் அடுத்தகட்டமாக வருகிற 24-ந்தேதி ஊர்வலமும், 27-ந்தேதி ஒத்துழைமையாக இயக்கம் என்ற பேரில் போராட்டமும் நடக்கிறது. இந்த போராட்டங்களால் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதது.
போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக அடுத்த மாதம் 21-ந்தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருக்கிறோம். எனவே அரசு எங்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

×

X